Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தானியங்கிக் கார்களுக்கேற்ப புதியச் சட்டங்களை இயற்றத் தயாராகிறது மலேசியா!
தற்போதைய செய்திகள்

தானியங்கிக் கார்களுக்கேற்ப புதியச் சட்டங்களை இயற்றத் தயாராகிறது மலேசியா!

Share:

சைபர்ஜெயா, செப்டம்பர்.08-

வெளிநாடுகளைப் போல் மலேசியாவிலும், ஓட்டுநர் இல்லா தானியங்கி கார்கள் இயக்கப்பட வேண்டுமென்றால், அதற்கான பாதுகாப்புச் சட்டங்களும் இயற்றப்பட வேண்டுமென இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இன்று சைபர்ஜெயாவிலுள்ள சைபர் அஸிஸ் டவரில் நாட்டின் முதல் வாகனத் தடயவியல் ஆய்வகத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், புதியச் சட்டங்கள் இயற்றுவது குறித்து போக்குவரத்து அமைச்சிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குத் தயாராகும் அதே வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான புதியச் சட்டங்களும் இயற்றப்பட வேண்டியது அவசியமானது என்றும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

Related News