தங்கள் பிள்ளைகளின் கல்வி மதிப்பீடு குறித்து பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கைகள் இருந்தாலும் தொடக்கப்பள்ளி 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வை கல்வி அமைச்சு மீண்டும் கொண்டு வராது என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
சிறந்த எதிர்காலக் கல்வியை உறுதி செய்வதற்காக, புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில், 2027ஆம் ஆண்டு பள்ளிப் பாடத்திட்ட அமலாக்க மறுஆய்வுதான் அமைச்சின் தற்போதைய கவனமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் பெற்றோர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வழங்குவதன் மூலம் அமைச்சின் முயற்சிகளுக்கு உதவலாம் என்றார்.
தங்கள் பிள்ளைகளின் கல்வி மதிப்பீட்டிற்காக யூ.பி.எஸ்.ஆர் தேர்வு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என பெற்றோர்களில் ஒரு தரப்பினர் முன்வைத்த கோரிக்கை குறித்து அமைச்சரிடம் வினவியபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வை கல்வி அமைச்சு முழுமையாக நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.








