Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூவர் கைது
தற்போதைய செய்திகள்

மூவர் கைது

Share:

மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், பல்வேறு வகையான துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் உபகரணங்கள் போன்றவற்றை பதுக்கி வைத்திருந்த மூன்று ஆடவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை, மாலையில், நெகிரி செம்பிலான், குவால பிலாஹ் மாவட்டத்தில் உள்ள ஜொஹோல் மற்றும் கம்புங் கெமென்சே உலு ஆகிய இடங்களில் 30 வயதுடைய ஓர் ஆடவரையும், 40 வயதுடைய இரு ஆடவரையும் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் சுபெர்ரிந்தென்டான் அம்ரான் முகமாட் கானி தெரிவித்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை, பிரம்படி அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மூவரும் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளனர்.

Related News