கோலாலம்பூர், அக்டோபர்.06-
அமானா கட்சித் தலைவரும், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சருமான முகமட் சாபு, கோலாலம்பூர் ஐஜேஎன் இருதய சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக மேற்கொள்ளப்படும் சோதனையின் அடிப்படையில் முகமட் சாபு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








