Jan 19, 2026
Thisaigal NewsYouTube
டிரேலர் லாரியால் பெட்ரோல் நிலையம் சேதம்: லாரி ஓட்டுனருக்குச் சம்மன் வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

டிரேலர் லாரியால் பெட்ரோல் நிலையம் சேதம்: லாரி ஓட்டுனருக்குச் சம்மன் வழங்கப்பட்டது

Share:

கூலிம், டிசம்பர்.28-

கிள்ளானிலிருந்து கோலா கெட்டில் நோக்கி செல்லவிருந்த டிரேலர் லாரி ஒன்று கூலிம் செர்டாங் சாலையில் அமைந்திருந்த FIVE சுங்கை ஊலார் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலை நிரப்பிவிட்டு வெளியேரும் சமயத்தில் டிரேலரின் பாகங்கள் பெட்ரோல் நிலையத்தில் மோதப்பட்டு பெட்ரோல் நிலையம் சேதம் அடைந்திருப்பந்தாக கூலிம் மாவட்ட தலைமை காவல் நிலையத்தின் துணைத் தலைமை காவல்துறை அதிகாரி டிஎஸ்பி முகமாட் ஃபய்சால் தெங்கு யேங் தெரிவித்தார்.

நேற்று காலை 7.20 மணி அளவில் நிகழ்ந்த விபத்தில் 24 வயதுடைய இளைஞன் ஓட்டிச் சென்ற VOLVO பச்சை மற்றும் வெள்ளை நிற டிரேலர் லாரி பெட்ரோலை நிரப்பிவிட்டு டிரேலர் டீசல் பம் (Diesel Pam) இருக்கும் பகுதிக்கு வளைத்த சமயத்தில் பெட்ரோல் நிலையத்தின் கூரைகளில் லாரியின் பாகங்கள் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளன. இந்த விபத்தினால் எவருக்கும் எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்றார் டிஎஸ்பி ஃபய்சால்.

ஆகவே, டிரேலர் ஓட்டுனருக்கு கூலிம் மாவட்ட காவல் நிலையம் சம்மன் வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் இவ்விபத்து 10 LN 166/59 சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் என்றார் டிஎஸ்பி ஃபய்சால்.

Related News