Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கு பதற்றம்: மலேசிய ஏர்லைன்ஸ் லண்டனுக்கு கூடுதல் விமானங்களை இயக்குகிறது
தற்போதைய செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம்: மலேசிய ஏர்லைன்ஸ் லண்டனுக்கு கூடுதல் விமானங்களை இயக்குகிறது

Share:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், கோலாலம்பூர் - லண்டன் இடையே கூடுதல் விமானங்களை அறிவித்துள்ளது.

இது குறித்து மலேசியா ஏவியேஷன் குழுமம் கூறுகையில் வரும் ஏப்ரல் 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

வான்வெளி மூடப்பட்டுள்ளதால், பயண நேரங்கள் மற்றும் விமானப் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் சூழலைப் பயன்படுத்தி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை ஆசியாவின் முக்கிய போக்குவரத்து மையமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகளின் தேவையைப் பொறுத்து விமானங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News