Oct 13, 2026
Thisaigal NewsYouTube

கிள்ளானில் வெ.3.3 கோடி மதிப்புள்ள மின்கழிவுகள் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கிள்ளான், மார்ச்.07-

கிள்ளான், மேரு தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள உலோகக் கழிவுகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கடல்சார் போலீசார், 33 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12. 3 லட்சம் கிலோ மின்கழிவுகளைப் பறிமுதல் செய்தனர்.

சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து காலை 11.00 மணிக்கு நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனையில் 30 வயது உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதன் கமாண்டர் உதவி ஆணையர் ருஸ்லி சீ ஆரி கூறினார்.

அந்த தொழிற்சாலை, பழைய உலோகப் பொருள்களைப் பதப்படுத்தும் உரிமத்தை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் மின் கழிவுகளைப் பதப்படுத்தும் அனுமதி அதனிடம் இல்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

அந்த வளாகத்தை ஆய்வு செய்த போது 2005ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தர விதிமுறைகளின் கீழ் அட்டவணையிடப்பட்ட கழிவுகள் என அவை வகைப்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்