பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமன்சாரா, என்.கெ.வி.இ. நெடுஞ்சாலையின் 19.6 ஆவது கிலோ மீட்டரில் மதுபோதையில் ஆடவர் செலுத்திய வாகனம் , மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது மோதி , மூவருக்கு மரணம் விளைவித்த கோர விபத்து தொடர்பில் விசாரணை அறிக்கை தயாராகி வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
26 வயதுடைய வாகனமோட்டி, தோள்பட்டையில் கடும் காயங்களுக்கு ஆளாகிய நிலையில் அவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்நபர் விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று ஃபக்ருடின் குறிப்பிட்டார். நேற்று அதிகாலை 5.59 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மழைக்காக ஒதுங்கிய மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது ஆடவரின் வாகனம் மோதியதில் 19 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

Related News

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்


