Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கார்களுக்குத் தீ வைத்த நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

கார்களுக்குத் தீ வைத்த நால்வர் கைது

Share:

கார்களுக்கு தீ வைத்தது, சிவப்பு சாயம் வீச்சி நடத்தியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக வட்டி முதலைகளுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டி முதலையிடம் கடன் வாங்கியவர்கள், வட்டி பணத்தை முறையாக செலுத்த தவறியதைத் தொடர்ந்து, கடன் பெற்றவர்களை அச்சுறுத்தும் வகையில், அவர்களின் கார்களுக்கு தீயிட்டு நாச வேலை புரிந்திருப்பது தெரியவந்துள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் சுஹைலி சேயி தெரிவித்தார்.
22 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் ஈப்போவில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News