Jan 23, 2026
Thisaigal NewsYouTube
தனிச்சின்னமா, அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் கிட் சியாங்
தற்போதைய செய்திகள்

தனிச்சின்னமா, அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் கிட் சியாங்

Share:

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு பெரிக்காத்தான் நேஷனலின் ஆட்சிக்கு உட்பட்ட கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா ஆகிய 4 மாநிலங்கள் மெர்டேக்கா தின தனிச் சின்னமும், கருப்பொருளும் பயன்படுத்தப்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றது முதல் அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் நிலவியிருந்தாலும் தேசிய தின விழாயொட்டிய நிகழ்வு குறித்து யாரும் இதுவரையில் சர்ச்சை செய்தது இல்லை. அன்றைய நாளில் எதிர்க்கட்சி என்ற முறையில் டிஏபி, மத்திய அரசாங்கத்தின் முடிவை கேள்வி எழுப்பியது கிடையாது. ஆனால், தற்போது சில தரப்பினர், தேசிய தினத்தின் கருப்பொருள் மற்றும் சின்னம் குறித்து சர்ச்சை செய்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது என்று முன்னாள் இஸ்கண்டார் எம்.பி.யான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

இந்த 4 மாநிலங்களில் மெர்டேக்கா தினத்திற்கான சொந்த சின்னமும், கருப்பொருளும் வெளியிடப்படக்கூடும் என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி அறிவித்து இருப்பது தொடர்பில் லிம் கிட் சியாங் கருத்துரைத்தார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது