May 24, 2026
Thisaigal NewsYouTube
இருவர் வீட்டில் இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

இருவர் வீட்டில் இறந்து கிடந்தனர்

Share:

ஜோகூர் , ஆகஸ்ட் 24-

ஜோகூர், மூவார், சுங்கை அபோங்- கில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற இருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நபர் மிக பலவீனமான நிலையில் கிடந்தது காணப்பட்டதாக மூவார் மாட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

இறந்தவர்கள் 76 வயது தந்தை மற்றும் 37 வயது மகன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அண்டை வீட்டுக்காரகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த வீட்டை போலீசார் சோதனையிட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News