Dec 5, 2025
Thisaigal NewsYouTube
எனது நாளைய அறிவிப்பு மக்களுக்கு மிகப் பெரிய அனுகூலமாகும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

எனது நாளைய அறிவிப்பு மக்களுக்கு மிகப் பெரிய அனுகூலமாகும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

நாளை புதன்கிழமை தாம் அறிவிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு, நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய அனுகூலத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கான கட்டுமானத்திற்கு நியாயமாக அதே வேளையில் நல்வாழ்வை உறுதி செய்யக்கூடிய இந்த முயற்சியானது, காலக் கண்ணாடியைப் பிரதிபலிக்கக்கூடியதாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தமது தலைமையிலான மடானி அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு ஏற்ப ஒவ்வொன்றும் அமல்படுத்தப்பட்டு வரும் அதே வேளையில், சீர்திருத்தத்திற்கான ஒவ்வொரு நடவடிக்கையையும் தாம் உறுதியாக மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தமது அறிவிப்பு அமையவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், அதற்கான போஸ்டரையும் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Related News