Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பாலஸ்தீன மக்களுக்காக பள்ளிகளில் ஒருமைப்பாட்டு வாரம் மறு பரிசீலனை செய்வீர்
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்காக பள்ளிகளில் ஒருமைப்பாட்டு வாரம் மறு பரிசீலனை செய்வீர்

Share:

இஸ்ரேலின் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், உயர்கல்விக்கூடங்களிலும் ஒருமைப்பாட்டு வாரம் நடத்தப்படுவதை மறுபரிசீலனை செய்யுமாறு பிகேஆர் கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள், கல்வி அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பள்ளிகளும், கல்லூரிகளும், உயர் கல்விக்கூடங்களும் மாணவர்களின் கற்றல், கற்பித்தலுக்கு உரிய கல்விப் பீடங்களாக விளங்கிட வேண்டுமே தவிர பகைமையையும், வெறுப்புணர்ச்சியையும் விதைக்கக்கூடிய தளங்களாக மாறி விடக்கூடாது என்று சீன சமூகத்தை சேர்ந்த பிகேஆர் கட்சியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு நல்குவதாக கூறி, பள்ளி மாணவர்களை மாதிரி துப்பாக்கிகளை கைகளில் தூக்கச் சொல்வதும், மாதிரி ஆயுதங்களை தாங்கி நடவடிக்கைளில் ஈடுபட சொல்வதும் மலேசியாவின் கலாச்சாரம் அல்ல. அதனை இளம் பிஞ்சுகளின் மனதில் விதைக்கக்கூடாது. அந்த வகையில் பாலஸ்தீன மக்களுக்கான ஒருமைப்பாட்டுத் திட்டத்தை கல்வி அமைச்சு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். .

Related News