Oct 6, 2026
Thisaigal NewsYouTube

கேஎல்ஐஏ சம்பவம்: விசாரணை அறிக்கையை ஆய்வு செய்யும் சட்டத்துறை அலுவலகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேஎல்ஐஏ சம்பவம்: விசாரணை அறிக்கையை ஆய்வு செய்யும் சட்டத்துறை அலுவலகம்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையின் தொடர்பான சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலுவலகம் பெற்றுள்ளது.

விசாரணையில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுகி மொக்தார் தெரிவித்தார்.

செப்டம்பர் 28ஆம் தேதி கேஎல்ஐஏ முனையம் ஒன்றில் இரண்டு போலீஸ்காரர்களைத் தாக்கியதாக முஹமட் ஷுஹைலி மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை 25 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் மருத்துவ அறிக்கையும் பெறப்பட்டுள்ளன. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 323ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →