Jan 11, 2026
Thisaigal NewsYouTube
நடுக்கடலில் சினிமா பாணி வேட்டை: 27 சட்டவிரோத குடியேறிகளுடன் சிக்கிய மீன்பிடி படகு!
தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் சினிமா பாணி வேட்டை: 27 சட்டவிரோத குடியேறிகளுடன் சிக்கிய மீன்பிடி படகு!

Share:

போர்ட் கிள்ளான், ஜனவரி.11-

சபாக் பெர்ணாம், சுங்கை பெசார் கடற்பரப்பில் அதிகாலை ஒரு மணி அளவில், மலேசிய கடல்சார் அமலாக்க முகமையினர் நடத்திய அதிரடி சோதனையில், இந்தோனேசியாவிலிருந்து கள்ளத்தனமாக அழைத்து வரப்பட்ட 27 சட்டவிரோத குடியேறிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். மலேசிய எல்லைக்குள் நுழைய முயன்ற அந்தப் படகை அதிகாரிகள் மறித்தபோது, பிடிபடுவதிலிருந்து தப்பிக்கப் படகோட்டி கடலில் குதித்து தப்ப முயன்றதும், படகு தரைதட்டிய நிலையில் அதிகாரிகள் நடத்திய போராட்டமும் நடுக்கடலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த கடல்சார் அமலாக்க முகாமையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் Captain Abdul Muhaimin Muhammad Salleh குறிப்பிடுகயில், இந்தோனேசியாவின் தஞ்சோங் பாலாய் பகுதியிலிருந்து ஒரு நபருக்கு 2,500 ரிங்கிட்டைப் பெற்றுக் கொண்டு, மலேசிய மீன்பிடி படகுகள் மூலமாக அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி ஊடுருவ முயன்ற திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்தார். மனிதக் கடத்தல், குடிநுழைவுச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள், இந்தச் சட்டவிரோத கும்பலுக்குப் பின்னால் உள்ள படகு உரிமையாளர்களையும் ஏஜெண்டுகளையும் வலைவீசித் தேடி வருகின்றனர்..

Related News

நடுக்கடலில் சினிமா பாணி வேட்டை: 27 சட்டவிரோத குடியேறிகளுட... | Thisaigal News