Dec 17, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் இந்தியப் பெண் பல் மருத்துவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் இந்தியப் பெண் பல் மருத்துவர் உயிரிழந்தார்

Share:

சிரம்பான், டிசம்பர்.17-

இந்தியப் பெண் பல் மருத்துவர் ஒருவர் பயணித்த கார் SUV ரகக் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த மருத்துவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் சிரம்பான், ஜாலான் சிரம்பான் – கோல பிலா சாலையில் புக்கிட் புத்துஸ் அருகில் நிகழ்ந்தது. கோல பிலா, துவாங்கு அம்புவான் நஜியா மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணியாற்றி வந்த 33 வயது டாக்டர் எஸ். சிந்துஜா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸாஹார் அப்துல் ரஹ்மான் அடையாளம் கூறினார்.

டாக்டர் சிந்துஜா சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, வளைவில் திரும்பும் போது எதிரே வந்த ஒரு SUV வாகனத்துடன் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடுமையான காயங்களுக்கு ஆளான டாக்டர் சிந்துஜா சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஏசிபி அஸாஹார் குறிப்பிட்டார்.

Related News