May 22, 2026
Thisaigal NewsYouTube
எரிவாயு களன் வெடித்ததில் இருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

எரிவாயு களன் வெடித்ததில் இருவர் மரணம்

Share:

பூச்சோங், தாமான் பெரிண்டஸ்திரியன் பூச்சோங் தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் வெல்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் உயரமான oxyacetylene கியஸ் தோம்பு வெடித்ததில் இரண்டு தொழிலாளர்கள் மரணமுற்ற வேளையில் மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று காலை 10.10 மணியளவில் அந்த தொழில் பேட்டைப் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பை தீயணைப்பு மீட்புப்படை பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூச்சோங், சுபாங் மற்றும் சைபர் ஜெயா ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 24 வீரர்கள் அந்த வளாகத்தில் oxyacetylene கியஸ் தோம்பு வெடித்ததை உறுதிப்படுத்தினர்.

இதில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகியிருப்பதை கண்டனர். கியஸ் தோம்பு வெடித்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அஹ்மத் முக்லிஸ் முக்தார் குறிப்பிட்டார்.

Related News