Sarawak அருகிலுள்ள Pakan, Sungai Lemujan - னில் காணாமல் போனதாக கூறப்பட்டு தேடப்பட்டு வந்த பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார்.
இன்று காலை 8.40 மணியளவில் 13 வயது Vincent Tiong Meng Wei என்ற அந்த இளைஞனின் உடல் அவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைத்தூரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக Bintangor தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் Nicholas Belulin தெரிவித்தார்.
முன்னதாக, பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இளைஞன் நீரில் மூழ்கியதாக புகார் அளித்திருந்ததாகவும் அதனை தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப் படையினர் தேடல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் Nicholas Belulin கூறினார்.
சவப்பரிசோதனைக்காக அவ்விளைஞனின் உடல் Sarikei மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் ஓர் அறிக்கையில் இன்று அறிவித்தார்.








