Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விசாரணை முடிவடைய ஒரு வாரம் ஆகலாம்.
தற்போதைய செய்திகள்

விசாரணை முடிவடைய ஒரு வாரம் ஆகலாம்.

Share:

எல்மினா விமான விபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விமானக் கருப்புப் பெட்டியில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றால் இந்த விபத்து தொடர்பான விசாரணை ஒரு வாரத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வான் போக்குவரத்துத் துறையின் நிபுணத்துவம் பெற்றவரும் அத்துறையின் முன்னாள் வாரியத் தலைவருமான டத்தோ ஶ்ரீ அசாருதீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எனினும் கருப்புப் பெட்டியில் சேதம் ஏதும் ஏற்பட்டியிருக்குமானால் , விமானத்தில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று அசாருதீன் விளக்கினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரேன் வான் போக்குவரத்துப் பாதையில் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் க்கு செந்தமான எம்.ஹ்17 விமானப் பேரிடர் சம்பவத்தில் அந்த விமானத்தின் கருப்புப் பெட்டியை சோதனை செய்வதில் முக்கிய பங்காற்றியவருமான அசாருதீன் , 33 ஆயிரம் அடியிலிருந்து விமானம் கீழே விழுந்திருந்தாலும் அந்த கருப்புப் பெட்டி சேதமுறவில்லை எனவே அப்பெட்டியில் உள்ள உரையாடலும் தெளிவாக கேட்க முடிந்ததாக நினைவு கூர்ந்தார்.

Related News