Jul 1, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

Share:

கோலாலம்பூரில், ஸ்கிசோஃப்ரினியா என்ற மனநலக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், நேற்று இரவு போலீசாரின் துரத்தல் நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

40 வயதுடைய அந்த அதிகாரி, சான் சோவ் லின் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜாலான் செராஸ் பகுதியில் இருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் துரத்தி பிடித்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த அதிகாரி, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை போக்குவரத்து போலீஸ்கார் மீது தனது பெரோடுவா ஆக்சியா காரை மோதி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் தொடர்புடையவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரி உடல்நலக் குறைபாடு காரணமாக விடுப்பில் இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

Related News