Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அந்த வங்காளதேச ஆடவர் குறித்து எந்தவொரு ஆருடமும் வேண்டாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த வங்காளதேச ஆடவர் குறித்து எந்தவொரு ஆருடமும் வேண்டாம்

பாலிக் புலாவ் , செப்டம்பர் 03-

அரச மலேசிய போலீஸ் படையின் சின்னத்தை தாங்கிய டி சட்டை ஒன்றை அணிந்துக்கொண்டு, வங்காளதேச ஆடவர் ஒருவர் பினாங்கில் சுற்றித் திரிந்ததாக சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் ஆருடம் கூற வேண்டாம் என்று பரத் தயா மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் கமருல் ரிசல் ஜெனல் கேட்டுக்கொண்டார்.

போலீஸ் படை சின்னம் மற்றும் பரத் தயா மாவட்ட போலீஸ் தலைமையகம் என அச்சிடப்பட்டுள்ள அந்த டி சட்டை, அதிகாரத்துவப்பணிக்கு உரிய டி சட்டை அல்ல. மாறாக, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பரத் தயா மாவட்ட போலீசார் ஏற்பாடு செய்திருந்த 2016 ஆம் ஆண்டுக்கான உடற்பயிற்சி மற்றும் கோதொங்- ரோயாங் போன்ற சமூக கூட்டுப்பணிக்காக அச்சிடப்பட்ட பிரத்தியேக டி சட்டையாகும்.

19 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியை நபர் ஒருவர் பதிவேற்றம் செய்துள்ளார். அதனை போலீஸ் துறையும் கண்டறிந்துள்ளதாக கமருல் ரிசல் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →