Sep 27, 2026
Thisaigal NewsYouTube
வங்கதேச சுற்றுலாப் பயணி பலி; மனைவி படுகாயம்
தற்போதைய செய்திகள்

வங்கதேச சுற்றுலாப் பயணி பலி; மனைவி படுகாயம்

Share:

மலேசியாவிற்குச் சுற்றுலா வந்த வங்கதேசத் தம்பதியினர், விமான நிலையத்திலிருந்து டாக்ஸியில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் கணவர் உயிரிழந்தார். குடிபோதையில் கார் ஓட்டிய ராணுவ வீரர் ஒருவரால் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

22 வயதுடைய முசாஹித் மில்லாட் என்ற வங்களாகதேசப் பிரஜை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி நபீசா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5.38 மணியளவில் மாஜு விரைவுச்சாலையில் எதிர் திசையில் வந்த ஃபோர்டு ஃபீஸ்டா கார், தம்பதியினர் பயணித்த இ-ஹெய்லிங் காரின் மீது மோதியது.விபத்தை ஏற்படுத்திய 31 வயது ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதை சோதனையில் அவர் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியிருந்தது உறுதியானது.

பலியானவரின் உடலை வங்கதேசத்திற்கு கொண்டு செல்ல அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Related News