பட்டர்வொர்த், செப்டம்பர்.09-
ஒரு பேரங்காடியில் பொருட்களைத் திருடிய பின்னர் வாடிக்கையாளர்களைக் கத்தி முனையில் காயப்படுத்திய ஒரு வியட்நாம் பிரஜைக்கு பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று எட்டு மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
அத்துடன் 20 ஆயிரம் ரிங்கிட் ரிங்கிட் அபராதம் விதித்தது. Nguyen Minh Hoa என்ற 36 வயதுடைய அந்த வியட்நாம் ஆடவர், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பட்டர்வொர்த், தெலாகா ஆயரில் உள்ள ஒரு பேரங்காடியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவர் 11 வயது குழந்தை ஒன்றையும் காயப்படுத்த முயற்சி செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








