Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பிடிக்காவிட்டால் வராதீர்கள்": இசைத் திருவிழா விவகாரத்தில் அமைச்சர் தியோங் கிங் சிங் அதிரடி
தற்போதைய செய்திகள்

பிடிக்காவிட்டால் வராதீர்கள்": இசைத் திருவிழா விவகாரத்தில் அமைச்சர் தியோங் கிங் சிங் அதிரடி

Share:

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் நடைபெறவுள்ள 'ரெய்ன் ரேவ்' நீர் இசைத் திருவிழாவிற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளைத் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் தியோங் கிங் சிங் கண்டித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய தியோங் கிங் சிங் , 'இந்த நிகழ்வில் கலந்துகொள்வது தனிமனித விருப்பம்; விருப்பம் இல்லாதவர்கள் வராமல் இருக்கலாம், ஆனால் மற்றவர்களின் உரிமையைப் பறிக்கக்கூடாது' எனத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சுற்றுலாத் துறை முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் மதம் மற்றும் இனத்தோடு தொடர்புபடுத்தி அரசியல் செய்வதால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கும் என எச்சரித்தார்.

முன்னதாக , பாஸ் மற்றும் பி.கே.ஆர் கட்சியின் ஒரு பிரிவினர் இந்த இசைத் திருவிழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது."

Related News