Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நிலச்சரிவு காரணமாக லெக்காஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நிலச்சரிவு காரணமாக லெக்காஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது

காஜாங், டிச.13-


நிலச்சரிவின் காரணமாக காஜாங் – சிரம்பான் விரைவுச் சாலையான லெக்காஸ் சாலையில் வடக்கை நோக்கி 9.3 கிலோ மீட்டரில் உள்ள அவசரத் தடம் மற்றும் மெது பயணத் தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணிகளுக்கு வழி விடும் வகையில் சம்பந்தப்பட்ட இரண்டு தடங்களும் மூடப்படுவதாக லெக்காஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து மேலாண்மைத் திட்டம், 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்டப் பகுதியை கடக்கும் போது போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் மற்றும் அறிவிப்பு பலகைகளைப் பின்பற்றி நடக்குமாறு வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →