Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட மூவர் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட மூவர் படுகாயம்

நவ.23-

இன்று அதிகாலை 3.25 மணியளவில் ஜாலான் குவந்தான் – கோலாலம்பூர் சாலையின் 74.5 ஆவது கிலோ மீட்டரில் மாரானுக்கு அருகில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர்.

இவ்விபத்தில் ரோந்துப் போலீசாரின் ஹோண்டா சிட்டி ரக காரும் டொயோட்டா ஹைலக்ஸ் வாகனமும் சம்பந்தப்பட்டு இருந்தன. இதில் இரு போலீஸ்காரர்களான 38 வயது காப்ரல் முகமட் ராபிப் ஹம்சா, 29 வயது சார்ஜன் முகமட் அசுஹார் ஹபிலி அஸ்மான் ஆகியோர் படுகாயம் அடைந்ததாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் வோங் கிம் வாய் தெரிவித்தார்.

டொயோட்டா ஹைலக்ஸ் வாகனத்தை செலுத்திய 48 நபரும் நெஞ்சுப்பகுதியில் பலத்த காயத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜெங்கா 19 இல் நிகழ்ந்த ஒரு விபத்து குறித்து புலன் விசாரணை செய்வதற்காக இரு போலீஸ்காரர்களும் ரோந்துப் போலீஸ் காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தாக டொயோட்டா ஹைலக்ஸ் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →