Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கொலை தொடர்பில் இரு சிங்கப்பூரியர்கள் உட்பட மூவர் கைது
தற்போதைய செய்திகள்

கொலை தொடர்பில் இரு சிங்கப்பூரியர்கள் உட்பட மூவர் கைது

Share:

25 வயது ஆடவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இரண்டு சிங்கப்பூரியர்கள் மற்றும் ஒரு மலேசியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை தொடர்பில் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்கு இடமாக நடந்த கொண்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த மூன்று பேரும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னதாக ஜோகூர் பாருவில் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் நிகழ்ந்த ஒரு கைகலப்பில் 25 வயதுடைய ஆடவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

Related News