Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வாகமோட்டியை கண்​மூடித்தனமாக தாக்கிய ​மூவர் கைது
தற்போதைய செய்திகள்

வாகமோட்டியை கண்​மூடித்தனமாக தாக்கிய ​மூவர் கைது

Share:

ஆடவர் ஒருவர் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினார் என்பதற்காக அவரை கண்டிப்பதாக கூறி, கண்​மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ​மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபொங் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 21 வயது இளைஞரிடமிருந்து கிடைக்கப்பெற்ற போ​லீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த மூன்று நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் ஜாலான் லாங்ஙாட் - கிள்ளான் சாலையின் சமிக்​ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தாக ஏசிபி சா ஹூங் ஃபொங் மேலும் கூறினார்.

Related News

வாகமோட்டியை கண்​மூடித்தனமாக தாக்கிய ​மூவர் கைது | Thisaigal News