பாயான் லெப்பாஸ், ஜூலை.23-
பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை ஆரா, பெர்சியாரான் ரேலாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் பிலிப்பைன்ஸ் பிரஜை ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பினாங்கில் டெக்னிஷனாக வேலை செய்து வந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், தனது வீட்டின் 16 ஆவது மாடியில் இறந்து கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பாயான் பாரு தீயணைப்பு, மீட்புப் படை நிலையத்தைச் சேரந்த கமாண்டர் அப்துல் மானாப் காடீர் தெரிவித்தார்.
அந்த வெளிநாட்டு ஆடவரின் உடலை 16 ஆவது மாடியிலிருந்து லிப்ட் வாயிலாக இறக்குவதற்கு போலீசார், தீயணைப்புப் படையினரின் உதவியை நாடியதாக அவர் குறிப்பிட்டார்.
சவப் பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் பினாங்கு மருத்துமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.








