Jun 17, 2026
Thisaigal NewsYouTube
 கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தலைவர்களுக்கு பகாங் சுல்தான் கண்டனம்
தற்போதைய செய்திகள்

கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தலைவர்களுக்கு பகாங் சுல்தான் கண்டனம்

Share:

சுயநலத்திற்காகப் பிரிவினையைத் தூண்டும் தலைவர்கள் மற்றும் கால சூழ்நிலைக்கு ஏற்ப தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்பவர்களை மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று கடுமையாகச் சாடியுள்ளார்.

லிப்பிஸ், சுங்காய் கோயானில் நடைபெற்ற மால் ஹிஜ்ரா கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய பகாங் சுல்தான், இனம், மதம் மற்றும் அரசியல் உணர்வுகள் வாக்கு வங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவது, சமூக ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் கவலை தெரிவித்தார்.

இன்றைய சவால்கள் போர் வடிவத்தில் வராமல், சமூக ஊடகங்கள் வழி பரப்பப்படும் அவதூறுகளாக உருவெடுத்துள்ளன என்றும், மக்கள் வெறும் மேடைப் பேச்சுகளை நம்பாமல் தலைவர்களின் உண்மையான செயல்பாடுகளையே மதிப்பிடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மனிதநேய அடிப்படையில் நாட்டில் அனுமதிக்கப்பட்ட அகதிகள் அல்லது குறிப்பிட்ட குழுவினர், தற்போது நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் கோரிக்கைகளை முன்வைப்பது மலேசியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

"அடைக்கலம் புகுந்தவர்கள், கப்பலின் திசையைத் தீர்மானிக்கக் கூடாது; நமது தாராள மனப்பான்மை, வீட்டுக்காரரின் உரிமையையே கேள்விக்குள்ளாக்கக் கூடாது" என எச்சரித்த சுல்தான், சட்ட அமலாக்கத் துறையினர் இதில் சட்டப்படியும் உறுதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Related News