Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மரம் விழுந்ததில் 4 வயது சிறுமி பலி
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்ததில் 4 வயது சிறுமி பலி

Share:

ஜெம்போல்- லில் மரம் விழுந்ததில் 4 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று மதியம் 1 மணியளவில் பத்து கிகிர் - ரில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் நிகழ்ந்ததாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் ஹூ சாங் ஹூக்தெரிவித்தார்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் 9 வயதுடைய சகோதரியும் காயமடைந்துள்ளதாக ஹூ சாங் ஹூக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களின் தந்தை அவ்விருவரையும் குளிப்பதற்கு பொழுதுபோக்கு மையத்திற்கு அழைத்து சென்ற பொழுது இவ்விபத்து நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் ஓர் அறிக்கையில் நேற்று கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மற்றொருவர் படுங்காயங்களுக்கு ஆளாகி குவாலா பிலாஹ், துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஹூ சாங் ஹூக் விளக்கினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு