கோலாலம்பூர், ஜனவரி.13-
கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் (Setapak) 19 வயது பெண்ணைக் கொள்ளையடித்ததுடன், அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 24 வயது இளைஞர் ஒருவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஹாஃபிக் அஷ்ராஃப் ஸாரின் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதிகாலையில் ஸ்தாபாக், தாமான் ஆயர் பானாஸ் உணவுங்காடி கார் நிறுத்தும் இடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
காரில் அமர்ந்திருந்த ஒரு பல்லைக்கழக மாணவியான அந்தப் பெண்ணும், அவரின் காதலரும், காருக்குள் அநாகரிகமான செயலில் ஈடுபட்டதாக கூறி, அவ்விருவரின் மைகாட் அட்டைகளையும் கைப்பேசிகளையும் பறிந்த அந்த இளைஞர், பின்னர் அந்தப் பெண்ணை அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட வைத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 14 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.








