நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புத்திட்டம் உட்பட அவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை அதீத அக்கறை செலுத்தியவரான முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சியு சே யோங், தமது லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2013 ஆம் பொதுத் தேர்தலில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக பகாவ் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு, மகத்தான வெற்றி பெற்ற சியு சே யோங், கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முதல் இரண்டு தவணைக் காலமாக சிரம்பான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்து வருகிறார்கள்.
இன்று லோபாக் பசார் மாலாம் சந்தையில் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களை இலக்காக கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடபட்ட சியு சே யோங் அந்த இரவு சந்தையில் வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் நேரடியாக கண்டறிந்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


