இன்று காலை 6.09 மணிக்கு 180 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட IndiGo விமானம் , நடுவானில் ஏற்பட்ட இயந்திர கோறாற்றினால் தாய்லாந்து புகேட் தீவில் அவசரமாக தரையிறங்கியது.
பயணிகள் அனைவருக்கும் விசா வழங்கப்பட்டு, அந்த உல்லாச தீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தின் இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் அந்த ஏர்பஸ் விமானம் இன்று பின்னிரவு புக்கெட் தீவிலிருந்து சென்னைக்கு புறப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட IndiGo விமானம், காலை 7.05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் சென்றவதற்கு அட்டவணையிடப்பட்ட நிலையில் விமானம் குறித்த நேரத்தில் வந்தடையாததால் பயணிகளின் உறவினர்கள் பதற்றத்திற்கு ஆளாகினர்.
எனினும் புக்கேட் தீவிலிருந்து புறப்படவிருக்கும் IGO 1032 என்ற பதிவு எண்ணைக் கொண்ட IndiGo விமானம், நாளை சனிக்கிழமை அதிகாலையில் சென்னை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








