Jun 30, 2026
Thisaigal NewsYouTube
RON95 பெட்ரோல் மானியம் நீட்டிப்பு: பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

RON95 பெட்ரோல் மானியம் நீட்டிப்பு: பிரதமர் அன்வார் உறுதி

Share:

வரும் மே மாதத்திற்குப் பிறகும் RON95 'புடி மடானி' பெட்ரோல் மானியத் திட்டத்தைத் தொடர அரசாங்கம் அனைத்து வழிகளையும் ஆராயும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதியளித்துள்ளார்.

பெட்ரோனாஸ் நிறுவனத்தின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, பிரேசில் மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து மாற்று பெட்ரோலிய ஆதாரங்களைக் கண்டறிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வரும் மே மாதத்திற்குப் பிறகும் இந்த மானியத் திட்டத்தைத் தடையின்றித் தொடர முடியும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று புக்கிட் ஜெலுத்தோங், தெங்கு அம்புவான் ஜெம்மா, பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இந்த உத்தரவாதத்தை தெரிவித்தார்.

பிரதமர் நேற்று வெளியிட்ட அறிவிப்பிப்பின்படி, ஈரான் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க,

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், மாதத்திற்கு 300 லிட்டர் என்றிருந்த BUDI95 பெட்ரோல் வாங்கும் வரம்பு, 200 லிட்டராகக் குறைக்கப்படவிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

எனினும் இந்த நிலை வரும் மே மாதத்திற்கு பிறகு பழைய நிலைமைக்கு திரும்பும் சாத்தியம் இருப்பதை பிரதமர் இன்று கோடிக்காட்டியுள்ளார்.

Related News

RON95 பெட்ரோல் மானியம் நீட்டிப்பு: பிரதமர் அன்வார் உறுதி | Thisaigal News