சிப்பாங், ஆகஸ்ட்.11-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் மூலம் சபாவிற்கு போதைப்பொருள் கடத்தும் தொடர்பு முறை அண்மையில் மூன்று உள்ளூர் நபர்கள் பிடிபட்டது மூலம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அந்த மூன்று ஆடவர்களையும் கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு கைது செய்தது மூலம் மூன்று வெவ்வேறு சோதனைகளில் 4 லட்சத்து 36 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தக் கும்பல், சரவாக்கிற்கு போதைப்பொருளைக் கடத்துவதற்கு அதிகாலையில் செல்லும் விமானங்கள் பயன்படுத்தப்படுவதை வியூகமாகக் கொண்டிந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அல்பானி ஹம்ஸா தெரிவித்தார்.








