May 24, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலவன்ஸ் தொகையை இழக்கலாம்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலவன்ஸ் தொகையை இழக்கலாம்

Share:

ஜார்ஜ் டவுன்,ஆகஸ்ட் 06-

மக்களவைக்கூட்டத்தில் குறிப்பிட்ட காலம் வரை கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுக்கான அலவன்ஸ் தொகையை இழக்கும் அபாயம் இருப்பதாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் எச்சரித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாடாளுமன்ற சேவை சட்டம் வகை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சேவைக் காலத்தின் போது மக்களவை கூட்டத் தொடரில் கலந்து கொள்வது அவசியமாகும் என்று அந்த சட்டம் வலியுறுத்துகிறது.

நியாயமான காரணமின்றி மக்களவைக்கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாத எம்.பி.க்களின் அவலவன்ஸ் தொகையில் பிடித்தம் செய்வதற்கும் சட்டத்தில் இடம் உண்டு.

அதேவேளையில் ஏற்புடைய காரணமின்றி ஒருவர் 6 மாத காலத்திற்கு மக்களவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் தனது எம்.பி. பதவியை இழக்க நேரிடும் என்றும் டான் ஸ்ரீ ஜோஹாரி எச்சரித்துள்ளார்.

Related News