Jan 10, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கான தொடக்க நிதி உதவி அடுத்த ஆண்டு முன்கூட்டியே  வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கான தொடக்க நிதி உதவி அடுத்த ஆண்டு முன்கூட்டியே வழங்கப்படும்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.09-

மாணவர்களுக்கான Bantuan Awal Persekolahan எனும் பள்ளித் தொடக்க கால நிதி உதவி, அடுத்த ஆண்டு, தற்போது வழங்கப்படும் கால அளவை விட முன்கூட்டியே வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் உறுதி அளித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான உதவித் தொகை பள்ளித் தவணை தொடங்கிய முதல் வாரத்தில் வழங்கப்படுவது குறித்து பெற்றோர்களிடமிருந்து வந்த கருத்துகள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பள்ளித் தேவைகளுக்கான ஆயத்தப் பணிகளை இன்னும் விரைவாகத் தொடங்க ஏதுவாக இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.

தற்போது பள்ளி திறக்கப்படும் முதல் வாரத்தில் இந்த தொடக்க நிதி உதவி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. வரும் 2027 ஆம் ஆண்டில் அதற்கு முன்னதாகவே வழங்குவதற்கான கடப்பாட்டை கல்வி அமைச்சு கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான தலா 150 ரிங்கிட் நிதி உதவி, வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் முதல் 13-ஆம் தேதிக்குள் பள்ளிகள் வழியாக பணமாக விநியோகிக்கப்படும். இத்திட்டத்திற்காக 2026-ஆம் ஆண்டில் அரசாங்கம் மொத்தம் 800 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெற்றோர்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களைச் சந்தித்து இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

மாணவர்களுக்கான தொடக்க நிதி உதவி அடுத்த ஆண்டு முன்கூட்டியே... | Thisaigal News