Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க தொடங்கின
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க தொடங்கின

Share:

சீனப்புத்தாண்டை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளன. இப்பண்டிகையுடன் சேர்ந்து நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கும் திரும்புகின்றனர்.

சூங்ஙாய் பூலோ - விலிருந்து ரவாங் செலாத்தான் - கிற்கும் ரவாங் செலாத்தான்னிலிருந்து சூங்ஙாய் பூலோவிற்கும் வாகனங்கள் மெதுவாக நகர்வதுடன் Slim River - ரிலிருந்து Sungkai - கிற்கு செல்லும் பாதையிலும் போக்குவரத்து நெரிசலினால் வாகனங்கள் தாமதமாக செல்வதாக XPLUS அறிவித்துள்ளது.

25 ஆவது கிலோமீட்டரில் சாலை விபத்தின் காரணமாக Putrajaya - விலிருந்து Bandar Gamuda Cove வரையிலும் Skudai - யிலிருந்து Sedenak வரையிலும் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

Klang Valley -யிலிருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் Bukit Tinggi - யை நோக்கி Genting Sempah செல்லும் வழி மட்டுமே வாகன நெரிசலில் பாதிக்கப்பட்டிருப்பதாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

மதியம் அல்லது மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு செல்லுமாறு வலியுறுத்தப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக் கொண்டது.

Related News

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை