Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசை
தற்போதைய செய்திகள்

மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசை

Share:

கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எஸ். லீ யில் வீற்றிருக்கும் நாட்டின் தாய்க்கோயிலான ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நாளை ஜுலை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசை சிறப்பாக நடைபெறவிருக்கிறது. கடந்த மாதம் 25 ஆம் தேதி நடை​பெற்ற ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் 7 ஆவது மகா கும்பாபி​ஷேகத்தையொட்டி தற்போது மண்டலாபிசேகப் பூசை நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் நாளை ஞாயிற்றுக்​கிழமை மாலை 3.30 மணிக்கு அபிசேகம்,
மாலை 6.00 மணிக்கு நித்திய பூசை, அதனை தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு நாதஸ்வரக் கச்சேரி மற்றும் நடன நிகழ்சிகள் நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு விசேச பூசையினைத் தொடர்ந்து அம்மன் திருவீதியுலா வலம் வருதல். விசேட தீபாராதனையைத் தொடர்ந்து பிரசாதம் மற்றும் காளாஞ்சி வழங்குதல் நிகழ்வு நடைபெறும்.
உபயப் பிரதிநிதிகள் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவரும், உபய நாட்டாண்மையுமான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா, உபய பிரதிநிதி டத்தோ டி.ராஜ்குமார் மற்றும் உபயப் பிரதிநிதி டத்தோ, கு.செல்வராஜு ஆகியோர் முன்னி​லையில் நடைபெறும் மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசையில் அனைவரும் குடும்ப சமேதரராய் தவறாது கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற அழைப்பு ​விடுக்கப்பட்டுள்ளது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி