ஜோகூர் பாரு, அக்டோபர்.13-
மோட்டார் சைக்கிள் வாயிலாக சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்திச் சென்ற மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி சிகரெட்டுகளைக் கடத்திய நிலையில், சிங்கப்பூர் வூட்லென்ஸ் சோதனைச் சாவடியில் சிங்கப்பூர் குடிநுழைவுத்துறையும், ICA அதிகாரிகளும் அந்த நபரை தடுத்து நிறுத்திச் சோதனையிட்ட போது, வரி செலுத்தப்படாத 400 க்கும் மேற்பட்ட பாக்கெட்டு சிகரெட்டுகளைத் தனது மோட்டார் சைக்களில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுற்றுப் பயணிகள் என்ற போர்வையில் சிங்கப்பூருக்குள் நுழையும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளவர்கள் தடுக்கப்பட்டு சோதனையிடும் முறையில் அந்த மலேசியப் பிரஜை சிக்கியதாக அது குறிப்பிட்டுள்ளது.








