Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மேலும் பலர் கைது செய்யப்படலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மேலும் பலர் கைது செய்யப்படலாம்

கோலாலம்பூர், டிச. 28-

கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி கோலாலம்பூர், அம்பாங் – ஸ்ரீ பெட்டாலிங் எல்.ஆர்.டி. வழித்தடத்தில் பண்டார் தாசேக் எல்.ஆர்.டி. ரயில் நிலையத்தில் இரு வெவ்வேறு கால்பந்தாட்ட ரசிகர்கள் கும்பல்களுக்கு இடையில் நடந்த சண்டை தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைகலப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளிகளை கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் அடையாம் காணப்பட்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இதுவரையில் 20 க்கும் 24 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட எஞ்சியவர்களை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்டவர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை தயாராகி வருவதாக குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் குறித்து மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள பொது மக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளதாக கூறினார்.

எல்.ஆர்.டி. ரயிலில் உள்ள ரசிகர் கும்பலை மற்றொரு கும்பல் தாக்குவதும், கையில் கிடைத்த தட்டுமுட்டுப் பொருட்களை கொண்டு ரயிலின் கண்ணாடியை உடைப்பதும், பெரும் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்