Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ரவுப் வட்டாரத்தில் தீபாவளி கலை இரவு 2024

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரவுப் வட்டாரத்தில் தீபாவளி கலை இரவு 2024

பகாங்,அக்டோபர் 09-

மடானி அரசாங்கத்தின் நல்லாதரவுடன், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 7.31 மணிக்கு பகாங், ரவூப், செரோ ( சீரோ ) வட்டார இந்திய கலைக் கலாச்சார இயக்கத்தின் ஏற்பாட்டில் திவான் ஜூப்லி பேராக் மண்டபத்தில் மாபெரும் தீபாவளி கலை இரவு 2024 வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.

இந்த மாபெரும் கலைநிகழ்ச்சிக்கு ராவுப் நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui, மேலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன், துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி, மற்றும் பகாங் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி திருமதி அனிதா குமாரி அப்துல்லா ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவரும், ரவூப் பிகேஆர் தொகுதி துணைத் தலைவருமான மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த கலைவிழாவில் நாட்டின் முன்னணி கலைஞரான “மண்ணின் மைந்தர்” லோக்காப், / அவர்தம் குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கிறார் என்று ரவூப் மாவட்ட மன்ற உறுப்பினருமான மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்..

இந்த தீபாவளி கலை இரவில் ஆடல், பாடல் மட்டுமின்றி சிறப்பு அங்கமாக மிக பிரமாண்டமான பரிசுகளுடன் அதிர்ஷ்ட குலுக்கலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பற்றுச்சீட்டு 2.00 வெள்ளி வீதம், ஒரு பற்றுச்சீட்டு புத்தகம் 20.00 வெள்ளி என கடைசி நேர விற்பனையில் உள்ளது.

முதல் பரிசு : மோட்டார் வண்டி
இரண்டாம் பரிசு : 50’ திறன் தொலைக்காட்சி
மூன்றாம் பரிசு : திறன்பேசி

தொடர்ந்து 30 விதமான தரமான பரிசுகள் காத்திருப்பதாக கலை விழாவின் இணை ஏற்பாட்டுக்குழுத் தலைவரும், ரவூப், பிகேஆர்தமன் அமலினா லெஸ்டாரி கிளைத் தலைவருமான N. தர்மராஜா செட்டியார் என்ற CD Raja தெரிவித்துள்ளார்.

ரவூப், CHEROH ( சீரோ ) வட்டார இந்திய கலைக் கலாச்சார இயக்கத்தின் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு வட்டார மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாபெரும் தீபாவளி கலை இரவு நிகழ்விற்கு மக்கள் திரளாக கலந்து கொள்வதுடன் அதிர்ஷ்டக்குலுக்கான பற்றுச்சீட்டையும் வாங்கி ஆதரவு நல்குமாறு ஏற்பாட்டுக்குழு சார்பில் மகேந்திரனும், தர்மராஜா செட்டியாரும் கேட்டுக்கொள்கின்றனர். தொடர்புக்கு:

Screen

தொடர்புக்கு:
திரு. மகேந்திரன் (013-9552818)
திரு. தர்மராஜா செட்டியார் (010-9609312)
திரு. மனோகரன் (018-7602292)

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →