விபத்துக்குள்ளாகும் வாகனங்களை இழுத்துச் செல்லும் இழுவை லோரி ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களை பிடிப்பதில் ஏற்பட்ட எல்லைத் தகராறு தொடர்பாக இரு கும்பல்கள் மோதிக் கொண்ட கலவரம் தொடர்பில் போலீசார் இதுவரையில் 30 பேரை கைது செய்துள்ளனர்.
குண்டர் கும்பல்களைப் போல் மோதிக் கொண்ட இழுவை லோரி ஓட்டுநர்கள் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தீவிர புலன் விசாரணையில் இதுவரையில் 30 பேர் பிடிபட்டுள்ளனர்.
இவ்வாரம் முற்பகுதியில் சுங்கை பெசி, கம்போங் தம்பாஹான் னில் நிகழ்ந்த இந்த பயங்கர தகராறு தொடர்பாக ஆகக்கடைசியாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 8 பேர் கைது செய்யப்பட்டது மூலம் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக கோலாலாம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.








