May 21, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ எம்.பி.க்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது
தற்போதைய செய்திகள்

அம்னோ எம்.பி.க்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது

Share:

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்மூப்பாக செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் Asyraf Wajdi Dusuki தெரிவித்துள்ளார். அம்னோ உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயல்படுவதற்கு கட்சியின் அமைப்புச்சட்டம் அவர்களை கட்டுப்படுத்துகிறது.

எனவே அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தகைய முடிவை எடுத்தாலும் அது கட்சியின் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அமைப்பு சட்டம் தெளிவான வரையறையை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சித் தாவுவதை தடை செய்வதற்கு எப்போது சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அப்போதே அம்னோவிலும் அத்தகைய திருத்தம் கொண்டு வரப்பட்டு விட்டதாக Asyraf Wajdi Dusuki விளக்கினார்.

Related News