Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் மாநிலக் கொடியை மிதித்த சம்பவம்: டிக்டாக் பயனரிடம் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

சரவாக் மாநிலக் கொடியை மிதித்த சம்பவம்: டிக்டாக் பயனரிடம் போலீஸ் விசாரணை

Share:

சரவாக் மாநிலக் கொடியை மிதித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் டிக்டாக் சமூக ஊடகப் பயனர் ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கூச்சிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு இரண்டு புகார்கள் கிடைத்துள்ளதாக கூச்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அலெக்சன் நாகா சாபு தெரிவித்துள்ளார்.

சுமார் ஐந்து விநாடிகள் கொண்ட காணொளியை டிக்டாக் பயனர் ஒருவர் பதிவேற்றியதாகவும், பின்னர் அது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சமூக அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, தண்டனைச் சட்டம் பிரிவு 504-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

சரவாக் மாநிலக் கொடியை மிதித்த சம்பவம்: டிக்டாக் பயனரிடம் ... | Thisaigal News