நாட்டின் 69ஆவது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 30 முதல் 31ஆம் தேதி வரை குறிப்பிட்ட ரயில் மற்றும் பேருந்து சேவைகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என ரேபிட் கே.எல் அறிவித்துள்ளது.
எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி, கே.எல் மோனோரைல் உள்ளிட்ட ரயில் சேவைகளுடன், சன்வே பி.ஆர்.டி, குறிப்பிட்ட பேருந்து வழித்தடங்கள் மற்றும் ஆன்-டிமாண்ட் ரேபிட் கே.எல் சேவைகளும் 24 மணி நேரமும் செயல்படும்.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பைச் சமாளிக்க முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் இடைவெளி குறைக்கப்படுவதுடன், தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களும் இயக்கப்படும்.
புத்ராஜெயாவில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்திற்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 103 இலவச இணைப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பயணிகள் நடமாட்டத்தை சீராக நிர்வகிக்கவும் நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும் 5,000-க்கும் மேற்பட்ட முன்னணி பணியாளர்கள் ஷிப்ட் முறையில் பணியமர்த்தப்படவுள்ளதாக ரேபிட் கே.எல் தெரிவித்துள்ளது.








