பினாங்கில் மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொது நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை தாசெக் குளுகோர் பகுதியில் உள்ள மின்னணுக் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக புக்கிட் அமான் துணை இயக்குநர் முஹம்மது அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
மாநில காவல்துறை விசாரணை அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.








