Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 12.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 12.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர், கிள்ளான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒபி டாரிங் ஆல்ஃபா 2 மற்றும் ஒபி டாரிங் ஆல்ஃபா 5 நடவடிக்கை மூலம் , மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதுடன் 12.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு அரசாங்க மற்றும் அமலாக்கத் துறைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒபி டாரிங் ஆல்ஃபா 2 நடவடிக்கையில், சட்டவிரோதமாக சேமித்து விநியோகிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு, பானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், மொத்தம் 5.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே, கிள்ளானில் மேற்கொள்ளப்பட்ட ஓப் தாரிங் ஆல்பா 5 நடவடிக்கையில் இரு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுபானங்கள், வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத தலைக்கவசங்கள், தொலைபேசி உபகரணங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொன்சாய் தாவரங்கள் உள்ளிட்ட 7.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து