May 24, 2026
Thisaigal NewsYouTube
பழங்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

பழங்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Share:

தம்பின், ஆகஸ்ட் 25-

யுத்த கால பயன்பாட்டுக்குரியது என்று நம்பப்படும் பழங்கால வெடிகுண்டு ஒன்று கட்டுமானத் தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான்,தம்பின், ஜாலான் பாசிர் பெசார் - ஜெலாய் - கெமாஸ் சாலையின் 3 ஆவது கிலோமீட்டரில் நேற்று சனிக்கிழமை மாலை 4.50 மணியளவில் தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அமிருட்டின் சேர்மன் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகளுக்கான பூமிவேலைகள் நடந்து கொண்டு இருந்த போது 153 செண்டிமீட்டர் நீளமும், 142 செண்டிமீட்டர் சுற்றுளவும் கொண்ட அந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது.

வான்வீச்சு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அந்தவெடிகுண்டு, 1000LBS ரகத்தைச் சேர்ந்ததாகும். பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் மூலம் ஒரு பாதுகாப்பான பகுதியில் அந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக அமிருட்டின் சேர்மன் மேலும் கூறினார்.

Related News